Spotlightசினிமா

இணையத்தில் கசிந்த ‘இந்தியன் 2’ கதை… அல்டிமேட் அதகளம்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், மற்றும் காஜல் அகர்வால் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியன்-2 படத்தின் கதை கசிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

அதில் வந்த கதைப்படி, சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர், யூடியூப் சேனலில் அரசியல்வாதிகள் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன. வெளிநாட்டில் இருக்கும் வயதான கமல்ஹாசன் அந்த யூடியூப் சேனலை பார்த்து கொதிக்கிறார்.

ஊழல் அரசியல்வாதிகளை களையெடுக்கும் நோக்கோடு விமானம் ஏறி சென்னைக்கு வருகிறார். இறந்துபோன மனைவியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சித்தார்த்தை சந்திக்கிறார். அவரிடம் இருந்து ஊழல் செய்து சொத்து குவித்த அரசியல்வாதிகள் பட்டியலை பெறுகிறார்.

பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார். அவருக்கு சித்தார்த்தும் வர்ம கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கிறார்கள். அரசியல்வாதிகள் வர்மகலையால் கொல்லப்படுவதை பார்த்து போலீசார் அதிர்கிறார்கள். கமலை பிடிக்க வலை விரிக்கிறார்கள். அவர் சிக்கினாரா? என்பது கிளைமாக்ஸ்.

இந்த கதையில் கமல் நடித்தால், அவரது ரசிகர்களுக்கு அதகளமான ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Facebook Comments

Related Articles

Back to top button