Spotlightவிளையாட்டு

ஐபிஎல் 2018: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!

ஐபிஎல் தொடரில் 33-வது லீக் போட்டியில் சென்னை அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தா: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

களமிறங்கிய சென்னை அணியின் சார்பில், வாட்சன் (36), டுபிளசி (27) சிறப்பான துவக்கம் தந்தனர். குல்தீப் பந்தில் ரெய்னா (31) ஆட்டமிழந்தார். நரைன் ‘சுழலில்’ ராயுடு (21) சிக்கினார். ஜடேஜா 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில், சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. தோனி (43) ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

இதை அடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய கொல்கத்தா அணியில் துவக்க வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். இதில் கிறிஸ் லின் 12(6) ரன்களில் நிகிடி பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இவரை தொடர்ந்து அடுத்து ஆட வந்த ராபின் உத்தப்பாவும் 6(8) ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சுனில் நரைன் 32(20) ரன்களில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 16(18) ரன்களில் ஹர்பஜன் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

ஷுப்மான் கில் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இக்கூட்டணி 17.4 ஓவரில் 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அபார வெற்றி பெற வைத்தது.

Facebook Comments

Related Articles

Back to top button