Spotlightசினிமா

ரத்த வெள்ளத்தில் பெண் சடலம்! ‘இறுதிப்பக்கம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Insomniac’s Dream Creations தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.

மர்மம் மற்றும் எமோஷனல் திரில்லர் கதைக்களத்தில் உருவான ‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக ‘இறுதிப்பக்கம் 2’ உருவாகியுள்ளது.

‘இறுதிப்பக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பெண், அவரைச் சுற்றிச் சிதறிக் கிடக்கும் பொருட்கள் மற்றும் ரத்தப் பாதையைக் கடந்து செல்லும் நீல நிற கார் ஆகியவை இடம்பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

ஒரு கொலையை விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்க முயலும் ஒரு தரப்புக்கும், அந்தக் குற்றத்தை மறைக்கப் போராடும் மற்றொரு தரப்புக்கும் இடையே நடைபெறும் ஆடு–புலி ஆட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன், அபிஷேக் ஜோசப், சத்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பையும், ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைப்பையும் கவனித்துள்ளனர்.

சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Facebook Comments

Related Articles

Back to top button