Spotlightவிமர்சனங்கள்

ஜடா; விமர்சனம் 3.25/5

11 பேரை கொண்டு விளையாடும் விளையாட்டான ‘கால்பந்து’ போட்டியை அனைவரும் பார்த்திருப்போம், விளையாடியும் இருப்போம். ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு விளையாட்டு தான் 7 பேர் மட்டும் விளையாடும் ‘கால்பந்து’ விளையாட்டு. இதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் ‘ஜடா’.

கதைப்படி, நாயகன் ஜடா (கதிர்), சிறந்த கால்பந்து வீரர். நேஷ்னல் வீரராக வேண்டும் என்பது இவரின் கனவு. இவரை அணு அணுவாக செதுக்கி உருவாக்கி வருகிறார் இவரது கோச் அருண் அலெக்சாண்டர். இவரோடு சேர்ந்து ஐந்து நண்பர்களும் கால்பந்து பயிற்சி செய்து வருகின்றனர்.

அச்சயமத்தில், பல வருடங்களாக தென் சென்னையில் நடைபெறாமல் இருந்த ’செவன்ஸ்’ (7 பேர்) கால்பந்து போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்குகிறார் ஏ பி ஸ்ரீதரும் சண்முகமும்.

இப்போட்டிக்கென்று எந்தவொரு விதிமுறைகளும் இல்லாததால், பலருக்கு கை, கால்கள் உடைந்து தனது வாழ்க்கையை இழந்தவர்கள் பலர்.

பல எதிர்ப்புகளுக்கிடையே, செவன்ஸ் போட்டியில் கலந்து கொள்கிறார் கதிர். இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி, அப்போட்டியில் கலந்து கொள்ள ஒரு மிகப்பெரும் காரணமும் இருக்கிறது.

போட்டிகள் நடைபெறும் போது கலவரம் ஏற்பட்டு அங்கு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. செமி பைனல் மற்றும் பைனல் போட்டி ஒரு கிராமத்தில் நடைபெறுகிறது. அங்கு ஒரு அமானுஷ்ய சக்தி கதிரையும் அவரது நண்பர்களையும் துரத்துகிறது.

யார் அந்த அமானுஷ்ய சக்தி, செவண்ஸ் போட்டியில் கதிர் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரு கால்பந்து வீரராக தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார் கதிர். எமோஷ்னல் காட்சிகளில் உச்சம் தொட்டு நிற்கிறார் நாயகன். நாயகி ரோஷினி உடனான காதல் காட்சிகளில் இன்னும் சற்று மெருகேற்றியிருக்கலாம்.

நாயகி ரோஷினி பார்ப்பதற்காக அழகு சிலை போல் வந்து செல்கிறார். வந்து செல்லும் கதாபாத்திரம் என்பதால் பெரிதாக நடிப்பில் ஈர்க்க முடியவில்லை.

யோகிபாபுவின் காமெடி பட்டாசுகள் ஆங்காங்கே மட்டும் வெடித்து சிதறுகின்றன. வழக்கமான காமெடி காட்சிகள் இல்லாதது சற்று ஏமாற்றம் தான். வெகு சீரியஸாக செல்லும் முதல் பாதி படத்தை வேறு ஒரு களத்திற்கு எடுத்துச் செல்லும் என்று பார்த்தால் இரண்டாம் பாதி சம்மந்தம் இல்லாத ஒரு களத்திற்கு செல்கிறது.

இரண்டாம் பாதி காட்சி அமைப்பு, திரைக்கதை வடிவமைப்பு என அனைத்திலும் குட் மார்க் வாங்கியிருந்தாலும் முதல் பாதியோடு அமையவிருந்த ஒரு ஈர்ப்பை கொடுக்க தவற விட்டது.

திறமைக்கு இங்கு மதிப்பில்லை என்ற க்ளைமாக்ஸ் காட்சியில் கதிரின் வசனம் கைதட்ட வைக்கிறது.

ஆடுகளம் கிஷோர் தனக்கான கதாபாத்திரத்தை நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார். வில்லனாக அறிமுகமாகியிருக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர் தனது கேரக்டரை மிரட்டி எடுத்திருக்கிறார்.

உடல் அசைவு, பார்வை இரண்டிலும் தனது வில்லன் கேரக்டரை நிலைநிறுத்தியிருக்கிறார் ஏபி ஸ்ரீதர்.

முன்னாள் கால்பந்து வீரராக வந்து நின்ற லிஜிஸ் தனது கதாபாத்திரத்தை எமோஷ்னலாக கொடுத்து கண்களில் நீரை எட்டிப் பார்க்க வைக்கிறார்.

ஏ ஆர் சூரியாவின் ஒளிப்பதிவு இரண்டாம் பாதியில் நடக்கும் மிரட்டலுக்கு கைகொடுத்திருக்கிறது.

சாம் சி எஸ் அவர்களின் பின்னனி இசை படத்தின் மிகப்பெரும் என்றே சொல்லலாம்.
படத்தின் தீம் இசை ரசிகர்களை கதைக்குள் ஈர்த்து விடுகிறது. பாடல்கள் ஓகே ரகம் தான்.

இயக்குனர் முதல் பாதியில் கொடுத்திருந்த ஒரு ஈர்ப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் ஜடா இன்னும் ஜோராக இருந்திருக்கும்.

ஜடா – செவன்ஸ் ஆட்டத்தை சாம் சி எஸ் அவர்களின் பின்னனி இசையோடு ரசிக்கலாம்…

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close