Spotlightவிமர்சனங்கள்

லாரா – விமர்சனம் 3/5

மணி மூர்த்தி இயக்கத்தில் கார்த்திகேசன், அசோக்குமார், அனுஸ்ரேயா ராஜன், மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லாரா”.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர்.ஜே.ரவீன். மேலும், இசையமைத்திருக்கிறா ரகு ஸ்ரவன் குமார்.

எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திகேசன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்

கதைக்குள் பயணித்துவிடலாம்…

காரைக்கால் பகுதியில் உள்ள நிரவியில் கடற்கரை ஓரத்தில் ஒரு பெண்ணின் உடல் ஒதுங்கிக் கிடக்கிறது என்று. யார் என்றே தெரியாத அளவிற்கு அந்த உடல் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கிறார் நிரவி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக வரும் கார்த்திகேசன்.

லாரன்ஸ் என்பவன் தனது மனைவி ஸ்டெல்லாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறான் . அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடிக்கடி வந்து குறைப்பட்டுக் கொள்கிறான். இந்நிலையில்தான் அந்தச் சடலம் கிடைக்கிறது.

லாரன்ஸிடம் அது உன் மனைவியா என்று அடையாளம் பார் என்று சொல்கிறது போலீஸ் .அதைப் பார்த்த லாரன்ஸ் தனது மனைவியல்ல என்கிறான். ஆனால் தன் மனைவியை அவனே கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறான் என்று ஒரு மர்மத் தொலைபேசி காவல் நிலையத்திற்கு வருகிறது.

லாரன்ஸைச் சந்தேகித்த போலீஸ் அவனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது. அவன் மர்மமாகத் தெரிகிறான். அவனுக்குள் ஏதோ ரகசியம் ஒளிந்து இருப்பதாக போலீஸ் சந்தேக படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணைப் பயணத்தின் போது அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விசாரணையை வெவ்வேறு திசைகளுக்கு இட்டுச் செல்கிறது. அப்படி போகும் வழியில் தோண்டத் தோண்ட மர்மங்கள் எதிர்ப்படுகின்றன.

ஹவாலா பணம் மோசடி செய்பவர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள், அவர்களைக் கொடுமைப்படும் மர்ம மனிதர்கள், லாராவின் காதல் கதை, ஆதரவற்றோர் இல்லம் , ஆயுதங்கள் தயாரிப்பு என்று கதை கிளைக் கதைகளாகப் பிரிகிறது. பரபரப்பாக படம் போய்க் கொண்டிருக்கும் போது லாராவின் காதல் கதை அத்தியாயம் விரிகிறது. அந்தக் காதல் கதைக்கும் இந்த கொலை கதைக்கும் என்ன தொடர்பு?

போலீசின் சந்தேக வளையத்தில் உள்ளூர் கவுன்சிலர் வருகிறார். அவருக்கு எம்எல்ஏ ஆதரவாக இருக்கிறார். போலீஸ் சந்தேகப்படும் ஒவ்வொருவர் மீதும் ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிறது.

போலீஸ் விழிபிதுங்கி நிற்கிறது . ஒரு கட்டத்தில் போலீஸின் அத்தனை சந்தேகங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு வேறொரு திருப்பம் நிகழ்கிறது. அது என்ன என்பதுதான் லாரா படத்தின் கதை.

கதையின் நாயகனாக கார்த்திகேசன், நம்மூர் இன்ஸ்பெக்டர் போன்றுமிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். எந்த வித ஹீரோயிசமும் இல்லாமல், தனது நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார்.

சிறிய கதாபாத்திரம் என்றாலும், தனக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார் அசோக் குமார். லாராவாக அனுஷ்ரேயா ராஜன் வருகிறார். தனது திறமையை நடிப்பின் மூலம் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். இயற்கையாக இறந்ததற்கு அசோக் குமார் எப்படி பொறுப்பேற்க முடியும். ஏதோ கொலைக் குற்றம் செய்தது போல்.

ஸ்டெல்லாவாக வரும் வெண்மதி, ஜெயாவாக வரும் வர்ஷினி இருவருமே அவரவர் பாத்திரங்களில் போட்டி போட்டு நடித்துள்ளனர். மேத்யூ வர்கீஸ் பரூக் யாசின் என்கிற எம் எல் ஏ பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும் பாலா,எஸ் கே பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவண் குமார். ஒரு க்ரைம் திரில்லருக்குத் தேவையான ஒளிப்பதிவும் இசையும் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.

லாராவின் முன் கதை காட்சிகளை சற்று குறைத்திருக்கலாம். நக்சலைட்கள் போல மாறூம் காட்சிகளையெல்லாம் ஏற்க முடியவில்லை.

சின்ன சின்ன குறைகள் எட்டிப் பார்த்தாலும், நல்லதொரு க்ரைம் த்ரில்லர் படத்திற்கு உண்டான பல விஷயங்கள் லாரா படத்தில் இருக்கிறது. திரைக்கதையின் வேகம், படத்தொகுப்பு என பல பலமான விஷயங்கள் படத்தில் இருப்பது ப்ளஸ் தான்.

லாரா – பெஸ்ட் க்ரைம் த்ரில்லர்

Facebook Comments

Related Articles

Back to top button