சினிமா

ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா !

சென்னை வடபழனியில் பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் அவர்களின் புதல்வனின் திருமணம் நடைபெற்றது.

பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் – சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் – கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் இன்று (25-4-2018) காலை ,வடபழனி – முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண் , ராமராஜன், சீனு ராமசாமி , சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட அரசியல் மற்றும் நாடார் சங்க பிரமுகர்களும் , மிகத் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தை ஜாகுவார் தங்கமும் , சகோதரர் ஜெய் ஜாகுவாரும் வரவேற்று உபசரித்தனர்.

 

Facebook Comments

Related Articles

Back to top button