
கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தினை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயண்ட்” நிறுவனம் வெளியிடுகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் சேட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருடைய பேச்சை அவர் கீழே இருந்து கேட்பது போன்று எடிட்டிங்க் செய்துள்ளனர். இந்த க்ளிப் தற்போது இணையத்தில் இந்த வீடியோ பரவி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலர் விஜய் தொலைகாட்சியை கலாய்த்து வருகின்றனர். கீழே அதன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது…
https://twitter.com/salemshankar/status/1528729343974842369?s=20&t=lFt7nfqHppdxGR0R0X00bA