அன்பு மயில்சாமி நடித்துள்ள திரிபுரம் , தயாரிப்பாளர் R.K. சுரேஷ் நடித்துள்ள வேட்டைநாய் போன்ற படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் இவர் தற்போது விவேக் ,தேவையானி ஜோடியாக நடித்துள்ள எழுமின் படத்தில் இசையமைத்துள்ளார்.
சிறுவர்களின் தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாக்கபட்டுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, இதில் விவேகம் ,டிக் டிக் டிக் , காலா போன்ற படங்களில் பாடல் பாடிய RAP SINGER யோகி B, கணேஷ் சந்திரசேகரனின் இசையில் பா.விஜய் வரிகளில் எழுமின் படத்தில் எழுச்சிமிகு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரனிடம் கேட்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது விவேகம் ,டிக் டிக் டிக் , காலா போன்ற பெரிய படங்களில் பணிபுரிந்த யோகி B அவர்கள் முதலில் புதிய இசையமைப்பாளர் படத்தில் பாட ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம் அதும் நான் அவரை அழைத்ததும் மலேசியாவில் இருந்து இங்கே வந்தது என் இசையில் பாடிக்கொடுத்துள்ளார்.
அது மட்டும் இல்லாது நான் அவருடன் பணிபுரிய முதலில் பயந்தேன் வேலை பார்க்க பார்க்க ஒரு குழந்தை போலவே நடந்து கொண்டார், என்னை போன்ற புதிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது அவருடன் பணிபுரிந்தது.