Spotlightசினிமா

வில்லனாக மாறிய அஜித் இயக்குனர்… யாருக்கு தெரியுமா..??

 

சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்

“ஜருகண்டி” படத்திற்கு நிதின்சத்யாவின் தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக அஜித்தின் மங்காத்தா படத்தினை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith’s director villain for new movie

இப்படத்திற்காக பல நட்சத்திரங்கள் கைக்கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய SG சார்லஸ் இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button