Spotlightசினிமா

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்தின் ‘தங்கப்புள்ள’ பாடல் வெளியீடு – ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டார்!

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பா. விஜய் வரிகளில், முருகவேல் பாடியுள்ள இப்பாடல், மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அன்பையும் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு அப்பா – மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை ZEE தமிழும், OTT உரிமையை ZEE5 நிறுவனமும் பெற்றுள்ளன.

டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் ‘தங்கப்புள்ள’ பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=Tj8j_2jh-5M

Facebook Comments

Related Articles

Back to top button