
இயக்கம்: பிரகபல்
நடிகர்கள்: யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, மதுசூதனராவ்
தயாரிப்பு: பிரேமா கிருஷ்ணதாஸ்
இசை: சக்தி பாலாஜி
ஒளிப்பதிவு: என் எஸ் உதயகுமார்
மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் யுவன் கிருஷ்ணா, தான் வளர்க்கும் காளி என்ற கிடாவை கிடா முட்டு போட்டிக்கு அழைத்துச் செல்கிறார். பல வருடங்களாக கிடா முட்டு சண்டையில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ரிதான் கிருஷ்ணா, அவரின் கிடா இந்த வருடமும் வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கிருஷ்ணாவின் காளி என்ற கிடா வென்று விடுகிறது.
இதனால் காளி கிடாவை வெட்டி சாய்க்க நினைக்கிறார் ரிதான். இந்த மோதல் எதில் முடிந்தது என்பதே படத்தின் மீதி கதை.
கிடா முட்டு சண்டை என்பது முந்தைய திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளாக வந்து செல்லும். ஆனால் முழு படமாக இதுவரை எந்த ஒரு சினிமாவிலும் வந்ததில்லை. அதை முதல் முறையாக செய்து காட்டி இருக்கிறது இந்த ஜாக்கி பட குழு.
அதற்காகவே படக்குழுவினருக்கு பெரிதாக வாழ்த்துக்கள் கூறலாம். இயக்குனர் இந்த படத்திற்காக மூன்று வருடங்கள் கிரவுண்ட் வொர்க் செய்திருக்கிறார்.
படத்தின் ஹீரோ மற்றும் வில்லன் இருவருமே தங்களது கதாபாத்திரத்திற்காக நன்றாகவே மெனக்கடல் செய்துள்ளனர். இருவரும் கிடாவை பிடித்துக் கொண்டு வரும் விதமாக இருக்கட்டும் ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் விதமாக இருக்கட்டும் இரண்டுமே படத்திற்கு ஒரு உயிர் துடிப்புடன் இருந்திருக்கிறது.
கிடாக்கள் மோதும் காட்சிகளில் கொம்பு இரண்டும் முட்டிக் கொள்ளும் போது ஏற்படும் ஒலி நம்மை அதிர வைக்கிறது. அம்மு அபிராமி காதல் காட்சிக்கு மட்டும் வந்து செல்லும் பாத்திரமாக இருக்கிறது. இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவாக செய்து முடித்து சென்றிருக்கிறார்.
படத்தை பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் இசையில் மதுரை மண்ணுக்கேற்ற பாடல்களையும் பின்னணி இசையும் நன்றாக கொடுத்திருக்கிறார்.
என் எஸ் உதயகுமார் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பக்க பலமாக வந்து நிற்கிறது. இயக்குனர் பிரகபல் இவர் ஏற்கனவே மட்டி என்ற படத்தை இயக்கி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர். இவரின் அடுத்த படைப்பாக ஜாக்கி என்ற படத்தைக் கொடுத்து மேலும் தான் ஒரு தனித்துவமான படைப்பாளி என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்…




