Spotlightவிமர்சனங்கள்

சர்தார் விமர்சனம் 4/5

 

இந்திய உளவுத் துறையின் உளவாளியாக நடித்திருக்கிறார் கார்த்தி. இந்த ‘சர்தார்’ தண்ணீருக்கான அவசியத்தை பேசி இருக்கிறார்.

கதைப்படி…

விஜய் பிரகாஷ் (கார்த்தி) ஒரு போலீஸ் அதிகாரி. அதிலும் இவர் ஒரு விளம்பர பிரியர்.

எந்த ஒரு குற்றவாளியை பிடித்தாலும் அது செய்தியாக வேண்டும். ட்ரெண்டாக வேண்டும் என நினைப்பவர். ஒரு கட்டத்தில் ஒரு தேச துரோகியின் வழக்கை கையில் எடுக்கிறார். துரோகி ஒரு சர்தார்.

அவர் யார்? என்பதுதான் படத்தின் மையக்கரு. அந்த சர்தாருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

மேலும் அது பற்றிய விசாரணையில் இந்தியாவை அச்சுறுத்த வரும் தண்ணீர் மாஃபியா கும்பலை கண்டுபிடிக்கிறார்.

அந்த கும்பல்.. ONE INDIA.. ONE PIPELINE.. ‘ஒரே நாடு, ஒரே குழாய்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது..

இயற்கையில் கிடைக்கும் தண்ணீர் தனியார்மயமானால்… இந்த நாடு என்னாகும்..? சர்தாருக்கும் இந்த கும்பலுக்கும் என்ன பிரச்சனை? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

இரு வேடங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. போலீஸ் அதிகாரி துறுதுறு வேடம் என்றால் சர்தார் வேடம் சபாஷ் போட வைக்கிறது.

ரொமான்ஸ் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் பட்டைய கிளப்பி இருக்கிறார் கார்த்தி.

ஆனால் இரண்டு வேடத்திற்கு போதுமான வித்தியாசத்தை அவர் காட்டவில்லை. உடல் மொழியை இன்னும் மெனக்கெட்டு மாற்றி இருக்கலாம்.

ராசி கண்ணா வக்கீல் ஆக வருகிறார். ஏதோ ஓரிரு பாட்டு & காட்சியில் வந்து செல்கிறார்.

கார்த்திக்கு ஜோடியாக ரஜிஷா வருகிறார் பக்கா கிராமத்து பெண். ஆனால் ஓவர் குண்டாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

முனீஸ்காந்த் வழக்கமான நடிப்பில் கவர்கிறார். வில்லன் சங்கி பாண்டே கார்ப்பரேட் வில்லனாக ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

யூடியுபர் குட்டி பையன் ரித்விக். படு சுட்டி. ஆனால் அவனே படத்தின் நாயகனுக்கு கிளைமாக்ஸில் விளக்கங்கள் சொல்லிக் கொடுப்பது ரொம்ப ரொம்ப ஓவர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு கலர்ப்புல்.. கிராமத்து கூத்து.. உளவாளி ஏஜெண்ட்.. தண்ணீர் மாஃபியா ஆகிய காட்சிகளுக்கு வர்ணம் கொடுத்து இருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை தெறிக்க விடுகிறது.. பாடல்கள் மோசம். ஈர்க்கவில்லை. படத்தின் வசனங்களை மழுங்க அடிக்க செய்துவிட்டது பின்னணி இசை. இதனால் வசனங்கள் புரியவில்லை.

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். இதில் தண்ணீர் மாஃபியாவை மக்களுக்கு திரையிட்டு காட்டி இருக்கிறார்.

இதை பார்த்த பின் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கே நமக்கு அச்சம் வந்துவிடும்.

தண்ணீர் இல்லாமல் போனதால் எத்தனை நாடுகளில் வன்முறைகள் வெடித்தது என்பதையும் ஆவணப்படுத்தி இருக்கிறார்.. தண்ணீர் வியாபாரத்தை சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் சொல்லி இருந்தால் சர்தார் பலம் கூடியிருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் கமர்ஷியல் சினிமாத்தனத்தை தவிர்த்து இருக்கலாம்.

ஆக சர்தார்… தண்ணீர் வியாபாரம்..

Facebook Comments

Related Articles

Back to top button