விமர்சனங்கள்

ஜான் டோ – விமர்சனம் 3.5/5

மர்மமான முறையில் காணாமல் போகும் குழந்தைகள், அவர்களின் மாயத்திற்குப் பின்னால் இருக்கும் தொடர்புகள், அதைத் தேடிச் செல்லும் விசாரணையில் வெளிப்படும் அதிர்ச்சிகரமான உண்மைகள் என ஒரு சுவாரசியமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது ‘ஜான் டோ’.

காணாமல் போன குழந்தைகளுக்கு என்ன நடந்தது? இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது யார்? விசாரணையின் முடிவில் வெளிப்படும் உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியான அர்ஜுன் தாஸ் தனது அழுத்தமான நடிப்பால் விசாரணைக் காட்சிகளுக்குக் கூடுதல் வலு சேர்த்துள்ளார். காவல்துறை அதிகாரியாக வரும் சஞ்சனா நடராஜன் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹிருதய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நீரவ் கவனம் ஈர்க்கிறார். சாரா, அனுபமா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இயக்குநர் மதுமிதா, வழக்கமான கிரைம் திரில்லர் பாணியிலிருந்து சற்று மாறுபட்டு மர்மங்களையும் உணர்வுகளையும் இணைத்து கதையை நகர்த்தியுள்ளார்.

குறிப்பாக, முதல் பாதியில் உருவாக்கப்படும் மர்மமும், இடைவேளையில் வரும் எதிர்பாராத திருப்பமும் படத்தின் முக்கிய பலம். இரண்டாம் பாதியில் விசாரணை வேகமெடுப்பது ரசிகர்களை கதையுடன் ஒன்றச் செய்கிறது.

ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் மலைப்பகுதிகளின் அழகையும், விசாரணைக் காட்சிகளின் பரபரப்பையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். க்ளைமாக்ஸில் சொல்லப்படும் கதையை இன்னமும் ஒரு உணர்ச்சிப் பூர்வமாகவோ அல்லது வேறு ஒரு கதைகளத்தையோ மையப்படுத்தி சொல்லியிருந்திருக்கலாம்..

பிளஸ்

  • சுவாரசியமான மர்மக் கதைக்களம்
  • எதிர்பாராத இடைவேளைத் திருப்பம்
  • விறுவிறுப்பான இரண்டாம் பாதி
  • அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜனின் நடிப்பு
  • ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

மைனஸ்

மர்மத்தை மையமாகக் கொண்ட கதைக்களம் என்பதால் சில இடங்களில் விசாரணையின் விவரங்களைக் கவனமாகப் பின்தொடர வேண்டியுள்ளது.

மொத்தத்தில்

‘ஜான் டோ’ – மர்மங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த, ரசிகர்களை இறுதிவரை ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்! 

 

Facebook Comments

Related Articles

Back to top button