Spotlightசினிமா

பப்பி படத்தை வெளியிட தடுக்கும் சிவசேனா.. காரணத்தை கேட்டா நீங்களே சிரிப்பீங்க!

ருண், யோகி பாபு நடிக்க உருவாகி வருகிறது ‘பப்பி’. இப்படத்தினை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அடால்ட் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தினை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா அமைப்பினர் காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முன்னோட்ட காட்சியில், ஒரு பக்கம் முழு நீள நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரின் புகைப்படமும் மற்றொரு பக்கம் நித்யானந்தாவின் புகைப்படமும் இருப்பதே இந்த புகார் மனுவிற்கு காரணமாம்.

வருடங்கள் பல கடந்தாலும், நித்யானந்தாவின் லீலை வீடியோக்களை யாரும் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாதே..

அவர்களுக்கென்று விளம்பரம் வேண்டுமென்றே வீண் புகார்களை கொடுத்து படக்குழுவினருக்கு மன உளைச்சலை கொடுத்து வருகின்றனர் இது போல் சிலர்.

Facebook Comments

Related Articles

Back to top button