Spotlightவிமர்சனங்கள்

ஜுங்கா – விமர்சனம் 2.5/5

ரெளத்திரம் படத்தில் ஆரம்பித்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,
காஷ்மோரா என மூன்று படங்களை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மூன்று தயாரிப்பாளர்களோடு சேர்ந்து விஜய் சேதுபதியும் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

ஒரு கிராமத்தில் பஸ் கண்டக்டராக வேலைபார்க்கும் விஜய்சேதுபதிக்கு, மடோனாவை காதல் செய்கிறார். இச்சமயத்தில், தான் ஒரு ‘டான்’ குடும்ப வாரிசு என்று விஜய் சேதுபதிக்கு தெரிய வர, தங்களது பூர்வீக சொத்தான சினிமா தியேட்டர் ஒன்று சென்னையில் தங்கள் கைவிட்டு போனதும் தனது அம்மா சரண்யா மூலம் தெரியவருகிறது.

உடனே தனது நண்பன் யோகிபாபு மற்றும் அம்மா, பாட்டியுடன் சென்னைக்கு வருகிறார். பின், சின்ன சின்ன அடிதடிகளை செய்து திரையரங்கை மீட்டெடுக்க பணத்தினை சம்பாதிக்கிறார்.

பணம் சம்பாதித்ததும் அப்பணத்தை சேர்த்து, தங்களது சினிமா தியேட்டரை வைத்துள்ள கோடீஸ்வரர் சுரேஷ் மேனனிடம் கொடுத்து தியேட்டரை திரும்ப கேட்கிறார்.

ஆனால் அதை தர மறுக்கும் சுரேஷ் மேனன், விஜய்சேதுபதியை அவமானப்படுத்தியும் அனுப்புகிறார். கோபமாக கிளம்பும் விஜய்சேதுபதிக்கு, சுரேஷ்மேனனின் மகள் சாயிஷா பிரான்ஸ் நாட்டில் படிப்பது தெரியவர, அவரை கடத்தி, தியேட்டரை தங்களுக்கு சொந்தமாக்க நினைத்து யோகிபாபுவுடன் பிரான்ஸ் பயணமாகிறார்.

பிரான்சில் விஜய் சேதுபதி ப்ளான் பழித்ததா..?? அவர் தியேட்டர் அவருக்கே திரும்ப கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு டார்க் காமெடி படத்திற்கு ப்ளான் செய்து படத்தை இயக்கியுள்ளனர் படக்குழுவினர். விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்தை மிகப் பொருத்தமாக கச்சிதமாக செய்திருக்கிறார். முதல் பாதியில் மடோனா நாயகியாகவும் , இரண்டாம் பாதியில் சாயிஷா நாயகியாகவும் வந்து செல்கின்றனர். இரண்டாம் பாதியை மிகவும் கல்ர்புல்லாக மாற்றியுள்ளார் சாயிஷா.

ஆங்காங்கே சில இடங்களில் இல்ல, பல இடங்களில் நமது பொருமையை சோதிக்கும் காட்சிகள் தான் அதிகம் . படத்தின் மிகப்பெரிய பலமும் நம்மை ரசிக்க வைக்கக் கூடிய கதாபாத்திரங்கள் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், டான் பாட்டி இவர்கள் மூவரும் தான்.

மடோனா எதற்காக இந்த படத்தில் வந்தார் சென்றார் என்பதே புரியாத ஒரு புதிர் தான். சாயிஷாவின் நடனம் சில துளிகள் நம்மை அசர வைக்கின்றன.

யோகிபாபு காமெடிகள் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றன. டான் பாட்டி கதாபாத்திரம் நம்மை கலகலப்பூட்டியிருக்கின்றன.

சரண்யாவுக்கு இதுநாள்வரை நடித்துவந்த அம்மா வேடத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கேரக்டர். வசன உச்சரிப்பு, உடல்மொழி என இரண்டிலும் அசத்துகிறார்..

டட்லி ஒளிப்பதிவின் வேகம் மிரள வைக்கிறது. இசையமைப்பாளர் சித்தார்த் விபினும் தனது பங்கிற்கு சுவாரஸ்யம் கூட்டுகிறார். பாடல்கள் எடுபடவில்லை.

படத்தில் ஐம்பது காமெடிக்கு ஸ்கெட்ச் போட்டு ஐந்து காமெடி மட்டுமே எடுபட்டிருப்பது கொஞ்சம் கவலை தான்.

ஜுங்கா – பாதியளவு தான் திருப்திபடுத்துகிறார் இந்த டண்டனக்கா டான்….

Facebook Comments

Related Articles

Back to top button