
தமிழ்நாட்டின் உயிர்நாடியாக திகழ்ந்து வந்த காவிரி நீர் கடந்த சில வருடங்களாக தமிழகத்திற்கு ஒரு எட்டா கணியாக இருந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் காவிரி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்தது அந்த தீர்ப்பில் ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் , 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் எனவும் இது தவிர அடுத்த 15 ஆண்டுகளுக்கு காவிரி நீர் பங்கீடு இதே அளவில் இருக்கும் எனவும் கூறியிருந்தது.
ஆனால், மத்திய அரசு பாராமுகம் காட்டி இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் எதுவும் எடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மெத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவர்.காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இது தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.