Spotlightசினிமா

இணையத்தை கலக்கும் ‘காப்பான்’ ட்ரெய்லர் 2!

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா நடிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது ‘காப்பான்’.

மிகப்பெரும் பொருட் செலவில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

நேற்று முன்தினம் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. முற்றிலும் ஆக்‌ஷன் அதிரடியில் வெளிவந்த இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை சுமார் 22 லட்சம் பேர் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது இந்த ட்ரெய்லர்.

இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. வரும் வெள்ளியன்று (செப் 20) இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button