இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது “2.O”
சுமார் ரூ. 500 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கிட்டதட்ட ஒரு வருடமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளே.
தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி படம் வெளிவரும் என இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Facebook Comments