சென்னையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் வாகனங்கள் இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
இந்நிகழ்வு, ஒரு மர்மமான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த வழக்கை விசாரிக்க சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி காளி நியமிக்கப்படுகிறார்.
சிறு வயதில் வட்டிக் கொடுமையால் தனது தாய், தந்தையை இழந்த நாயகன் ‘காளி’ இந்த வழக்கை மிக தீவிரமாக விசாரித்து வருகிறார்.
இறுதியாக, இந்த செயலை செய்து வரும் அந்த மர்ம மனிதன் யார்..?? எதற்காக இந்த செயலை செய்து வருகிறார் என்பது படத்தின் க்ளைமேக்ஸ்
படத்தின் நாயகனுக்கு உரித்தான லுக், அமைப்பு என அனைத்தும் இருந்தும் தன்னை ஒரு நாயகனாக முன்னிறுத்தும் காட்சிகள்(ஆக்ஷன், காதல்) என ஒன்றுமே அவர் செய்யாதது ஏமாற்றம் தான்.
படத்தில் வேண்டுமென்றே மாநில பிரிவினை மற்றும் சமூக கருத்துக்கள் திணிக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் எரிச்சலடைய வைத்துள்ளது.
நாயகி – அழகு மட்டும் பத்தாது
பின்னனி இசை – சுமார்
ஒளிப்பதிவு – சூப்பர்
கதையமைப்பில் கவனத்தை செலுத்தியிருக்கலாம் இயக்குனரே
காட்டுப்பய சார் இந்த காளி – நானும் படத்துல அந்த காட்டுப்பயல தான் சார் தேடிகிட்டிருந்தேன்.. நீங்க பார்த்தா சொல்லுங்க