Spotlightசினிமாதமிழ்நாடு

கொரோனா நிவாரணம்; நேரடியாக களமிறங்கிய திமுக எம் எல் ஏ கே என் நேரு!

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் தினசரி சராசரியாக 100 விதம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசும் பல தொண்டு நிறுவனங்களும் களம் இறங்கி தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

தமிழக அரசின் முதலமைச்சர், அமைச்சர்கள் சிலர், அதிகாரிகள் என களத்தில் இறங்கி வேலை செய்தாலும், ஆளுங்கட்சி எம் எல் ஏ-க்கள் பலரை காணவில்லை என்பது தான் பிரதான கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், திமுக எம் எல் ஏ கே என் நேரு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார். ஆம், திமுக கட்சியை சேர்ந்தவர்கள் கே.என். நேருவிடம், அரிசி இல்லாமல் மக்கள் வெகுவாக மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற கோரிக்கை வைக்க உடனே தனக்கு சொந்தமாக லால்குடியில் உள்ள அரிசி ஆலைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரிசி ஆலையில் விற்பனையை உடனே நிறுத்துங்கள், அத்தனை அரிசி மூட்டைகளையும் தொகுதி மக்களுக்கு கொடுங்கள் என்று அதிரடியாக உத்தரவு போட்டார்.

உடனே ஆலையில் இருந்த அரிசி மூட்டைகளை எல்லாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 35,000 பேருக்கு 1 லட்சத்து 50,000 கிலோ அரிசியை மொத்தமாக கலைஞர் அறிவாலயத்தில் அடுக்கி வைத்தார்.

சுமார் 35,000 பேருக்கு 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசிகளை தன்னுடைய சொந்த செலவில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த அரிசி மூட்டைகளை கட்சி பொறுப்பாளர்கள் ஏற்கனவே கணக்கு எடுத்து வைத்திருந்த எளிய மக்களிடம் நேரடியாக தனித்தனியாக ஒவ்வொரு பொறுப்பாளரும் கொடுத்தனர்.

ஏற்கனவே தனது சொந்த தொகுதியின் நிதியில் இருந்து சுமார் 25 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,

Facebook Comments

Related Articles

Back to top button