Spotlightசினிமா

“தோ வரேன்”… அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன்? இணையத்தில் வைரலாகும் மிரட்டலான Test Look!

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்திற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படும் கமல்ஹாசனின் Test Look புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், “தோ வரேன்” என்ற கேப்ஷனுடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் கருப்பு நிற சட்டை, வித்தியாசமான தோற்றம் மற்றும் கையில் அரிவாள் போன்ற ஆயுதத்துடன் கமல்ஹாசன் மிகவும் Intense Look-ல் காணப்படுகிறார். இந்த தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

குறிப்பாக இந்த புகைப்படம் புதிய படத்திற்கான Test Look Photoshoot-ல் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால், கமல்ஹாசன் – அருண் குமார் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த புதிய திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் குமார், தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் கவனம் பெற்றவர். தற்போது அவர் கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சினிமா ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் “தோ வரேன்” என்ற கேப்ஷனுடன் RKFI வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் எதை குறிக்கிறது என்பதும் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது படத்தின் தலைப்பா? அல்லது புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பான Teaser Caption-ஆ? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

மேலும் படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த முழுமையான விவரங்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கமல்ஹாசனின் மிரட்டலான Test Look வெளியாகியிருப்பதால், கமல்ஹாசன் – அருண் குமார் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தோ வரேன்” என கமல்ஹாசன் கொடுத்திருக்கும் இந்த புதிய சர்ப்ரைஸின் முழு பின்னணி என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பின்போது தெரியவரும்.

Facebook Comments

Related Articles

Back to top button