Spotlightசினிமா

11 மாதம் சிறையில் இருந்த நிர்மலாதேவி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்பேராசிரியராக பணியாற்றி வந்த நிர்மலா தேவி, அக்கல்லூரி மாணவிகளை தவறான வழியில் நடத்திய, ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார்விசாரித்து வந்ததில்பேராசிரியர் முருகன் உள்ளிட்ட சிலரும் சிக்கினர்.

இதுதொடர்பான வழக்கில் நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கேட்க, நிர்மலாதேவி தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பானவழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சில தினங்களுக்கு முன்புவிசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில்நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அரசு தரப்பில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால், நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இதையடுத்து, நிர்மலா தேவி இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Facebook Comments

Related Articles

Back to top button