
தூத்துக்குடி : காவல் நிலையம் அருகில் வழக்கறிஞரின் தம்பி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் தனது தம்பி சிவக்குமார் என்பவருடன் நீதிமன்றம், மற்றும் தெற்கு காவல் நிலையம் அருகில் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெறித்தனமாக தாக்கியுள்ளது.
இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிவகுமார் (வயது 40 ) கடந்த 2005ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் ஆத்திபழம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று தனது அண்ணன் வழக்கறிஞர் முத்துகுமாருடன் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிவகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
இது குறித்து எஸ்பி அருண் பாலகோபாலன், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்





