
சுமார் 971 கோடி ரூபாயில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு சில தினங்களுக்கு முன் அடிக்கல் நாட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
”சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?
பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே…. ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Facebook Comments