தூத்துக்குடியில் பாஜகவை விமர்சித்த மாணவி சோபியா கைது தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே.
சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
Facebook Comments