தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் (74) நேற்று சென்னையில் காலமானார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் உள்பட ஏராளமான விருதுகள் பெற்றவர். இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் நடைபெறுகிறது. அவருக்கு மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
“ஒருபுல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ரக்கட் ராமநாதன். பல குரல் கலையை அறிமுகப்படுத்தி அதை பிரிபலப்படுத்த அயராது உழைத்தவர். அவரது மறைவு திரைத்துறைக்கும் களைத்துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரதித்தில் ஆழ்திருக்கும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிராத்திக்கிறோம்” என்று கூறியுள்ளது.