Spotlightசினிமா

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’!

யக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘விருமன்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டார்.

படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.

அடுத்த வருட சம்மருக்கு படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இப்படத்தை சூர்யாவே தயாரிக்கிறார்.

கொம்பன் படத்திற்கு பிறகு முத்தையா – கார்த்தி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button