பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அனைவராலும் கவரப்பட்டவர் லாஸ்லியா. தனது கொஞ்சும் தமிழ், குறும்புத்தனம், நடனம், விளையாட்டு என அனைத்தையும் செய்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் லாஸ்லியா.
இவருக்கென ஆர்மி தயாராகி உள்ளது. இவரை வைத்து பல காதல் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த ஆறு வாரங்களாக லாஸ்லியாவை யாரும் நாமினேட் செய்யாத நிலையில், இந்த வாரம் அவரை சக போட்டியாளர்கள் பலர் நாமினேட் செய்துள்ளனர்.
அவரை காப்பாற்றுவதற்கு லாஸ்லியா ஆர்மி தயாராகி வருவதாக, அவரது ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
#Day43 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/30iJMfvaYG
— Vijay Television (@vijaytelevision) August 5, 2019