
தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் கர்ணன்.
இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நேற்று கர்ணன் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்ட காரணத்தால் கர்ணன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் இருவரும் நானே வருவேன் படத்தளத்திற்கு சென்று தனுஷுடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனுஷிற்கும் மாரி செல்வராஜ் இருவருக்கும் கர்ணன் உருவச் சிலையை பரிசாக அளித்தார்.
தனுஷின் ரசிகர்கள் கர்ணன் ஒரு வருட கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Facebook Comments