விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் , நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.
விஷால் , லிங்குசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய படமான சண்டக்கோழி வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19 வெளியாகுகிறது.