
சென்னை சைதாபேட்டையில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கில் நேற்று (26ம் தேதி) காட்டு பய சார் இந்த காளி படத்தின் காட்சி ரசிகர்களுக்கு இலவசமாக திரையிடப்பட்டது.
படம் பார்த்த ரசிகர்கள் தங்களால் முடிந்த தொகையை திரையரங்கில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டனர்.
காட்டு பய சார் இந்த காளி படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நடிகர் ஜெய்வந்த் உண்டியலில் இருந்த அனைத்து தொகையையும் கேரளா நிவாரண நிதிக்கு செலுத்துவதாக தெரிவித்தார்.
Facebook Comments