Spotlightசினிமா

கே ஜி எஃப் படத்தில் அதிரா கேரக்டர் இவரா..?? அதிர வைக்கும் அடுத்த அப்டேட்!

ன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே ஜி எஃப், கடந்த வருடம் வெளியானது. வெறும் நான்கு நாட்களில் 100 கோடியை எட்டி கன்னட திரையுலகை உலக சினிமா திரும்பி பார்க்க வைத்தது.

இப்படத்தில் நாயகனாக யஷ் நடித்திருந்தார். இப்படத்தின் 2 ஆம் பாகம் தற்போது மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், கே.ஜி.எஃப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற அதிரா என்ற கதாபத்திரத்தில் நடித்தது யார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. அதிரா கதாபத்திரத்தில் நடித்தது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை சற்று நேரத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

Facebook Comments

Related Articles

Back to top button