Spotlightசினிமா

இளைய திலகம் பிரபு வெளியிட்ட ’கூத்தன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் ”கூத்தன்”.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் இளைய திலகம் பிரபு இன்று அவர் வீட்டில் வெளியிட்டார். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன், கதாநாயகன் ராஜ் குமார், இசையமைப்பாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றிபெற பிரபு தனது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்தார்.
சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.  சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி.
சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணை நடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர்.
அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் பாலாஜி இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அசோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.
Facebook Comments

Related Articles

Back to top button