டெல்லி: லோக்சபாவில் நேற்று காங்கிரசின் யுவ சேனாதிபதி, ராகுல் காந்தி ஆற்றிய, ஆவேச உரை, சோர்ந்திருந்த அக்கட்சி தொண்டர்களை மட்டுமல்ல, “ஆஹா.. நாம நெனச்சத போல 2019 லோக்சபா தேர்தல் அவ்ளோ ஈஸி இல்ல போலயே” என்று பாஜகவினரையும் உணரச் செய்த, உசுப்பிவிட்ட உரை.
39 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி பெற்ற காங்கிரசால் அப்படி என்ன செய்துவிட முடியும் என்றுதான் அவைக்குள் பாஜக உறுப்பினர்கள் ஹாயாக அமர்ந்து இருந்தனர். ஆனால் ராகுல் காந்தி பேச ஆரம்பித்த மூன்றாவது நிமிடமே அவர்கள் ஆடித்தான் போய்விட்டனர்.
இருக்கையில் அவர்களால் அமர முடியவில்லை. ராகுல் காந்தியை பேச விடாமல் எழுந்து நின்று, கூச்சல் போடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் பாஜக எம்.பிக்கள்.
ராகுல் காந்தியின் இந்த உரையை லைவ் காட்சிளில் ஒளிபரப்பிய டிவி சேனல்களின் டிஆர்பி உச்சத்திற்கு எகிறியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என அத்தனை நியூஸ் சேனல்களும் ராகுல் காந்தியின் பேச்சை லைவ் செய்தன.
ஏழை, எளியவர்களும், ஆங்கிலம் அதிகம் அறியாதவர்களும்தான் காங்கிரசின் வாக்கு வங்கி என்பதை அறிந்தவர் ராகுல்… எனவே திட்டமிட்டே அவர், ஹிந்தியில்தான் பேசினார். இதுதான் பாஜகவின் பதற்றத்திற்கும் காரணம்.
புள்ளி விவரத்தை அள்ளி வீசினார்மக்களுக்கு 15 லட்சம் ரூபாயை தருவேன் என்றீர்களே, அந்த பணம் எங்கே? என ராகுல் காந்தி கேஷுவலாக ஆரம்பித்தபோதே, இன்று அவைக்குள் புயல் அடிக்கப்போகிறது என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டனர்.
“2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னீங்களே என்ன ஆச்சு? கடந்த ஓராண்டில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்தான் உருவாகியிருக்கு. சீனா 24 மணி நேரத்திற்கு 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது.
நமது அரசு வெறும் 400 பேருக்குதான் தர முடிகிறது” என்று ரமணா விஜயகாந்த் பாணியில் புள்ளி விவரத்தோடு, தனது பேச்சில் வடித்தார் ராகுல் காந்தி.
சாமானியனின் குரல்விவசாயிகள் வாங்கிய கடனை மோடி தள்ளுபடி செய்ய மாட்டாராம், தொழிலதிபர்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்வாராம்.
உலகம் எங்கும் பெட்ரோல், டீசல் விலை குறையுமாம், ஆனால் தொழிலதிபர் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதற்காக இந்தியாவில் மட்டும் பெட்ரோலிய பொருளின் விலை உயருமாம்..
என்னங்க சார் உங்க சட்டம்? என ராகுல் காந்தி கேட்டபோது, அவையில் இருந்த பிரதமர் மோடி அந்தபக்கமாக தனது முகத்தை திருப்பி கொண்டார்.