Spotlightசினிமா

சினிமா கலைஞர்களுக்காக உருவாகி வரும் ‘கூத்தன்’!

தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன்.
சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணைனடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.
அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன் நாயகியாக் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திறையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்தப்ப்டத்தில் பாலாஜி இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அஷோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா, தயாரிப்பு நீல்கரிஸ் முருகன்.
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட் வழங்கும் இந்த படம் ஷூட்டிங் முடிந்து  திரைக்கு வருவதற்கான மும்முரமான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில் மக்கள் மனதில் இந்தப்படத்தின் கிளாசிக்கல் மற்றும் வெஸ்டன் நடனம் மக்கள் மனதில் சங்கமிக்கும்..
Facebook Comments

Related Articles

Back to top button