விமர்சனங்கள்

லோகா – சேப்டர் ஒன்று : சந்திரா – விமர்சனம் 3/5

டாமினிக் அருண் அவர்களின் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லேன், சந்து சலீம்குமார், அருண் குரியன் , சாண்டி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் லோகா – சேப்டர் ஒன்று : சந்திரா..

Wayfarer Films என்ற நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கிறது. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் நிமிஷ் ரவி.

இசையமைத்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜோய்.

கேரளாவிலிருந்து பெங்களூருக்கு பயணமாகின்றனர் நஸ்லேன், சந்து சலீம்குமார், அருண் குரியன். இவர்கள் மூவரும் உயர் படிப்பிற்காக அங்கு செல்கின்றனர்.

அங்கு, தன் ப்ளாட்டின் எதிர் ப்ளாட்டில் இருக்கும் நாயகி கல்யாணி ப்ரியதர்ஷனை காண்கிறார். அவரைக் கண்டதும் அவர் மீது ஈர்ப்பாகிறார் நஸ்லேன்.

ஒருகட்டத்தில் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு ஒரு விதமான அமானுஷ்ய சக்தி இருப்பதைக் கண்டு வியந்து போகிறார் நஸ்லேன். இருந்தாலும், அவர் மீதான ஈர்ப்பு மட்டும் நஸ்லேனுக்கு குறையவில்லை.

அப்படியாக ஒருநாள், சந்திரா அதாவது கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு ஆபத்து ஏற்பட அவரைக் காப்பாற்றச் செல்கிறார் நஸ்லேன். அதன்பிறகு படத்தில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். சந்திரா என்ற கதாபாத்திரத்தில், அவ்வப்போது அமைதியாக எதுவும் அறியா பெண்ணாக வந்து அதன்பின் விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். இப்படியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதில் தன்னை அதிகமாகவே நிரூபித்தும் காட்டியிருக்கிறார் கல்யாணி.

பயந்த சுபாவம் கொண்ட நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார் நஸ்லேன். கல்யாணி சுற்றி சுற்றி வரும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக அதிரடி காட்டியிருக்கிறார் சாண்டி. அவரை பார்த்தாலே கோபம் கொப்பளிக்கும் வகையில் தனது கேரக்டரில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் சாண்டி.

மேலும், படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தேர்ந்தெடுத்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

யாரும் யூகிக்க முடியாத வண்ணம் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் இல்லையென்றாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்தியிருந்தார் இயக்குனர்.

புராண கதைகளை படமாக்கிய விதமும் காட்சிப்படுத்திய விதமும் சூப்பர். அனிமேஷன் காட்சிகளையும் தத்ரூபமாக கையாண்டிருக்கிறார்கள்.

நகைச்சுவை மற்றும் அமானுஷ்யம் என கதையில் நம்மை பயணம் செய்ய வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு பெரும் ப்ளஸ்ஸாக இருந்தது.

Production Designer – Banglan
Executive Producer – Jom Varghese
Line Producer – Bibin Perumbilly
Action Choreographer – Yannick Ben
Additional Screenplay & Dramaturgy – Santhy Balachandran
Art Director – Jithu Sebastian
Make up – Ronex Xavier
Costume Designers – Melwy J, Archana Rao
Other Language Dubbing Director – RP Bala (RP Studios)
Sound Design – Dawn Vincent
Sound Mix – Rajakrishnan
Lyricist – Sasikumar, MuRi, Zeba Tommy
Guest Composers – DJ Sekhar, JK
Production Controller – Vinosh Kaimal, Rinny Divakar
Chief Associate Director – Sujith Suresh
Associate Director – Sugheesh S.G
Chief Associate Cameraman – Anson Titus
Associate Cameraman – Hemil Sugunan
Project Heads – Sujai James, Deva Devan V
Ai Visualization & Post Production Supervisor – Ajmal Haneef
Still Photography – Rohit K Suresh, Amal C Sadhar
Publicity Design – Aesthetic Kunjamma
Casting Director – Vivek Anirudh
Creative Contribution – Jitin Puthanchery
DI Colorist – Yashika Routray
DI Studio – Color Planet Studios
Visual Effects – Little Hippo Studios & Pictorial Fx
Animation – Eunoians Studio

Facebook Comments

Related Articles

Back to top button