
மண்டேலா புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாவீரன்”. படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், மிகப்பெரும் வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவித்திருக்கிறது மாவீரன்.
இந்த வெற்றிக்கு உழைத்தவர்களிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் அனைவரும் நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில், சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மடோன் அஸ்வின், ஒளிப்பதிவாளர் விது அய்யண்ணா, இசையமைப்பாளர் பரத் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அனைவரும் படத்தினை நல்லபடியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “ இந்த படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம். மண்டேலா படம் வெளிவந்தவுடனே மடோன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
அதுமட்டுமல்லாமல், தயாரிப்பாளர் அருண் விஸ்வாவிற்கு இது முதல் படம். அவரின் முதல் வெற்றியில் நான் இருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
மடோன் அஸ்வின் விருப்பப்பட்டால் மீண்டும் அவரின் இயக்கத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னோட பெர்பார்மன்ஸ்க்கு வாழ்த்து வந்தது இந்த படத்தில் தான். மிமிக்ரியில் இருந்துதான் என்னோட சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. அதனால் எல்லா நடிகர்களின் பாதிப்பும் எனக்குள் இருக்கும்.
காமெடி மட்டுமே எனது அடையாளமாக இருந்தது. அதை வைத்து தான் சினிமாவிற்குள் வந்தேன். பெஸ்ட் ஆக்டராக இருக்கிறதை விட பெஸ்ட் எண்டர்டெயினரா இருக்க வேண்டும் என்பதே எனக்கு மிகப்பெரும் ஆசை. பெஸ்ட் எண்டர்டெயினர் என்பதை மக்கள் சிலருக்கு மட்டும் தான் கொடுத்திருக்கிறார்கள். அதில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை.
நல்ல இயக்குனர்கள் கிடைத்தால் யாரை வேண்டுமானும் நல்ல நடிகராக மாற்றலாம். அப்படி எனக்கு கிடைத்தவர் தான் இயக்குனர் மடோன் அஸ்வின். மாவீரன் படத்தில் நான் எந்த இடத்திலும் கவுண்டரோ, பஞ்ச் டயலாக்கோ எதையும் கூறவில்லை. அனைத்தையும் இயக்குனர் சொல்லி தான் செய்தேன். அதை என்னிடம் இருந்து அழகாக வாங்கினார் மடோன்..
பெர்பார்மின்ங் எண்டர்டெயினரா இருக்கணும் அப்படின்னு இந்த படம் எனக்கு உணர்த்தியிருக்கிறது. இந்த மாதிரியான இயக்குனர்களோடு தொடர்ந்து படம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்று கூறினார்..