
பெரிய முதலாளிகளின் அந்தரங்கங்களை மறைமுகமாக விசாரித்து அவர்கள் குறித்து எதிர்தரப்பிடம் ரிப்போர்ட் கூறும் டிடெக்டிவ் வேலை செய்து வருகிறார் கவின். மறுபுறம், பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறு பெண் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை வளர்த்து, அவர்கள் வைத்து பெரிய பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகளிடம் அனுப்பி அவர்களின் அந்தரங்க வீடியோவை எடுத்து வைக்கும் ஒரு வகையான வில்லத்தனத்தை செய்து வருபவர் ஆண்ட்ரியா.
பல கோடி மதிப்பிலான பணத்தை அனைத்து தொகுதிக்கும் பிரித்துக் கொடுக்கும் வேலையை ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார் அரசியல்வாதியான பவன்.
அதற்கான வேலையை முன்னெடுக்கும் நேரத்தில், ஒட்டுமொத்த பணத்தையும் ஒரு கும்பல் எம் ஆர் ராதா மாஸ்க் அணிந்து திருடிச் சென்று விடுகிறது.
அந்த கும்பலை கண்டுபிடிக்க கவினை நாடுகிறார் ஆண்ட்ரியா. அந்த பணத்தை கொள்ளையடித்த கும்பல் யார்.? கவின் என்ன செய்தார்.? இந்த கதைக்குள் நடக்கும் ட்விஸ்ட் என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருக்கிறார் கவின். அலட்டிக் கொள்ளாத நடிப்பு, எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாத ஒரு கேரக்டர், அசால்டாக செய்து விடும் ஒரு கதாபாத்திரம் என படத்தின் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்து அசத்தியிருக்கிறார் கவின்.
ஆண்ட்ரியாவுக்கும் கவினுக்குமிடையேயான கான்வர்சேஷன் நல்ல ஒரு காட்சியாக இருந்தது படத்திற்கு பலம் என்றே கூறலாம். ஆரம்பத்தில் ஆண்ட்ரியா அவருக்கான கதாபாத்திரத்தில் உள்ளே வரவில்லை என்றாலும் படம் நகர நகர, கதாபாத்திரத்தை அழகாக தாங்கிச் சென்றிருக்கிறார். இருந்தாலும் கொஞ்சம் ஆக்டிங் டோனை மாத்துங்க கவின். எல்லா படத்துலயும் அதே டோனாக தான் இருக்கிறது.
அதனாலோ என்னவோ கடைசியாக வந்த எந்த படமும் உங்களுக்கு சோபிக்கவில்லை. இதுவும்..
சூப்பர் மார்கெட் சீனை அவ்வளவு லெங்க்தாக கொண்டு செல்ல வேண்டிய அவசியல் இல்லை. அதுமட்டுமல்லாமல், கவின் கண்முன்னால் நடந்த இரண்டு கொலைகளும் படத்தில் பெரிதான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆங்காங்கே ஒரு சில காட்சிகள் மட்டுமே படத்திற்கு ப்ளஸ்ஸாக இருக்கிறதே தவிர, ஒட்டுமொத்த படமாக பார்த்தால் பெரிதான ஒரு ஈர்ப்பைக் கொடுக்க முடியவில்லை.
பின் குரலில் நெல்சன் பேசிக் கொண்டிருக்கும் போதே பின்னணி இசையை போட்டு விட்டு, அதை கேட்கவிடாமல் ஆக்கி விட்டனர்.
ஜி வி பிரகாஷ் இசையா இது என ஆச்சர்யப்பட வைத்துவிட்டார். அவ்வளவு நல்லாவா இருக்கு என்று கேட்காதீர்கள்.? சோதனைக்கு புள்ளைய பெத்து வேதனைன்னு பேரு வச்சானாம் அப்படியாக இருக்கிறது பின்னணி இசை. பாடல்கள் கேட்கும் ரகம் தான்.
இது தான் இந்த படத்தின் டோன் என்று பைனல் செய்யாமல் ஷூட்டிங் சென்று விட்டார் போல ஒளிப்பதிவாளர்.
நன்றாக வர வேண்டிய படத்தை கடித்து குதறி வைத்தாற் போல, குதறி வைத்துவிட்டு நம் தலையில் நாமே கையை வைத்து ”சோதனை தான்” என்று சொல்ல வைத்துவிட்டார்கள்.
Production Company: The Show Must Go On & Black Madras Films
Mentored by: Vetri Maaran
Written & Directed by: Vikarnan Ashok
Music Director: G.V. Prakash Kumar
Cinematographer: RD Rajasekhar
Editor: R. Ramar
Art Directors: Jacki, M. Vijay Iyyappan
Lyricists: Karumathur Manimaran, Kaber Vasuki
Choreographers: Azar, Viji
Stunt Directors: Peter Hein, Vicky
Costume Designers: Poorthi Pravin, Vipin Shankar
Producers: Andrea Jeremiah & S.P. Chockalingam





