Spotlightசினிமா

கோவையில் ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் தனுஷ்.. 5 சட்டமன்ற தொகுதிகளில் புதிய நற்பணி மன்றம்!

நடிகர் தனுஷ், தனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்றம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டத்தில் ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வமுள்ள தனுஷ் ரசிகர்கள், கோவை மாவட்ட தலைவர் சங்கரை தொடர்புகொள்ளுமாறு நடிகர் தனுஷ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரசிகர் மன்றத்தை வெறும் ரசிகர் அமைப்பாக மட்டுமல்லாமல், நற்பணி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடும் அமைப்பாக வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

கோவையில் 5 சட்டமன்ற தொகுதிகளில் நற்பணி மன்றம் தொடங்கப்பட உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button