
சென்னை: மே 29-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் 30 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கும் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Facebook Comments