
ஷியாம் மற்றும் ப்ரவீன் இருவரின் இயக்கத்தில் வெற்றி, ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஷாஜில், ஆர் என் ஆர் மனோகர், டயானா மற்றும் பார்வதி இவர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் மெமரீஸ்.
கதைப்படி,
நாயகன் வெற்றி, மருத்துவரான ஹரீஷ் பெராடியுடன் நேர்காணலில் இருக்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வை வெற்றி எடுத்துரைக்கிறார்.
தன்னை ஒரு மருத்துவர் நினைவுகளை அழித்து புதிய நினைவுகளை ஏற்றியதாக கூறுகிறார். அதனால், தான் பல சிக்கல்களுக்கு உள்ளானதாகவும் கூறுகிறார்.
கொலைகளும் செய்ததாகவும் போலீஸாரால் தேடப்பட்டு வந்ததாகவும் கூறுகிறார்.
நினைவுகளை அழித்து தன்னை ஓட விட்டதாகவும் கூறுகிறார் வெற்றி.
வெற்றிக்கு மீண்டும் பழைய நினைவுகள் வந்ததா.? யாரெல்லாம் வெற்றியின் வாழ்க்கையில் விளையாடினார்கள்.? வெற்றி ஏதும் விளையாடினாரா.? என்ற பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.
க்ரைம் த்ரில்லர் சப்ஜெட்டுக்கு பெயர் போனவரான வெற்றி, இந்த படத்தையும் தனது வழக்கமான பாணியில் கொடுத்திருக்கிறார்.
தனது பாணியையும் பாவனைகளையும் கதைகளையும் சற்று அவ்வப்போது மாற்றம் செய்து வந்தால் வெற்றியின் பயணம் வெற்றிகரமாகவே பயணப்படும்.
மற்ற நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள் .
என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதை கணித்து ஒரு முடிவுக்கு வரும் நேரத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி தலைசுற்ற வைத்து விடுகிறது படத்தின் கதை.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்துமா என்று கேட்டால் அது பெரும் சந்தேகம் தான். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருந்து கதை பெரிதான ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த தவறியதால் மெமரீஸ் மேலோட்டமாகவே நின்று விட்டுச் செல்கிறது.
கண் இமைக்காமல் படம் முழுவதையும் பார்த்துவிட்டுச் சென்றால் “ஒரு முறை பார்க்கலாம் சார்” என்ற பதில் நிச்சயம் வரும்.