Spotlightவிமர்சனங்கள்

ENEMY – Review 2.5/5

விஷால், ஆர்யா, மிர்ணாளினி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா இவர்களது நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வெளிவந்திருக்கும் படம் தான் “எனிமி”.

கதைப்படி,

சிறுவயதில் விஷாலும் ஆர்யாவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். பத்து வயதாக இருக்கும் போதே ஆர்யாவின் தந்தை பிரகாஷ் ராஜ் இருவருக்கும் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார்.

தன்னைப் போல இருவரையும் மிகப்பெரிய போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்ற கனவு பிரகாஷ்ராஜ்க்கு.. ஒருநாள் பிரகாஷ்ராஜ் இறந்துவிட, சூழ்நிலையால் ஆர்யாவும் விஷாலும் பிரிய வேண்டிய நிலை..

பல வருடங்களுக்குப் பிறகு ஆர்யாவும் விஷாலும் சிங்கப்பூரில் நேருக்கு நேராக சந்திக்கின்றனர். அப்போது ஆர்யாவும் விஷாலும் எதிர் எதிர் துருவங்களாக நிற்கிறார்கள்.. ஏன்.? எதற்காக.? என்பதே படத்தின் மீதிக் கதை..

ஆக்‌ஷன் ஹீரோவாக விஷால் ஒவ்வொரு காட்சிகளிலும் மிரட்டுகிறார். ஆக்‌ஷனுக்கே உரித்தான உடற்கட்டோடு 6 அடி உய்ரத்தோடு அசரடித்திருக்கிறார் விஷால். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிரட்டல்.

வில்லனாக ஆர்யாவும் தனது பங்கிற்கு தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். எமோஷ்னல், கோபம், என சைலண்ட் ஆக்‌ஷனை தெறிக்க விட்டிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா இருவரும் தங்களது பங்களிப்பை பக்காவாக செய்து முடித்திருக்கிறார்கள். நாயகியாக மிர்ணாளினி, இரண்டு பாடலுக்கு வந்து நடனம் மட்டும் ஆடிச் செல்வது இவருக்கு கொடுக்கப்பட்ட பணி. அதை சிறப்பாக செய்திருக்கிறார் மிர்ணாளினி.

ஹீரோவின் நண்பனாக கருணாகரன், காமெடி என்ற பெயரில் நம்மை சோதிக்கிறார். ஜிப்ரானின் பாடல்கள் ரிப்பீட் மோட் தான்…

இவருக்காக மட்டும் படத்தை பார்க்கலாம் என்று கூற வைத்திருக்கிறார் பின்னனி இசையமைப்பாளர் சாம் சி எஸ்.

பின்னனி இசை ஒவ்வொரு காட்சிக்கும் மிரட்டியிருக்கிறார். பிஜிஎம் கிங்க் சாம் சி எஸ்.

படத்தின் மேக்கிங்கிற்காக கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை கதைக்கு கொடுக்க தவறிவிட்டார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். இரு சிறுவர்களோடு முதல் பாதி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் மக்களோடு பேசுவதாக டிவி’யில் வந்து பேசும் ஆர்யா காட்சிகள் நம் பொறுமையை அதிகமாக சோதனை செய்வதாக ஆகிவிட்டது.

இரு சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாகவும் கதையின் ஓட்டமாகவும் இருந்தது. ஆனால், சிறியவர்களை வைத்து எடுக்கும் போது இருந்த மெனக்கெடல், ஆர்யா விஷாலை வைத்து எடுக்கும்போது இல்லாமல் போனது ஏமாற்றமே

ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு  சிங்கப்பூரின் அழகை கண்முன்னே நிறுத்தியுள்ளது.

அரிமா நம்பி, இருமுகன் படங்களில் கொடுத்த ஓட்டத்தை இப்படத்தில் கொடுக்க தவறிவிட்டார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.

ENEMY – ஏமாற்றம்..

Facebook Comments

Related Articles

Back to top button