Spotlightசினிமா

”மின்னல் முரளி” படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!!

டிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பாசில் ஜோசப் இயக்கியுள்ள “மின்னல் முரளி” திரைப்படம், உலகமெங்கும் டிசம்பர் 24, 2021 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது

Netflix இல் வரவிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படம், கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டமாக இப்படம் வெளிவர இருக்கிறது.

மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளிவர இருக்கிறது.

டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் Weekend Blockbusters (ஷோபியா பால்) தயாரித்து, பாசில் ஜோசப் இயக்கியுள்ள, இந்த திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் Netflix தளத்தில் பரத்யேகமாக வெளியாகிறது.

பட டிரெய்லர் குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது..
“டிரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இத்திரைப்படத்தின் உலகம் குறித்து எங்கள் ரசிகர்கள் அறிந்துகொள்ள, இந்த போனஸ் டிரெய்லர் மூலம் படத்தில் என்ன வரப்போகிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவை தர படத்தின் ஸ்னீக் பீக்கைப் பகிர முடிவு செய்தோம்.

ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதும், படத்தின் மூலம் அவர்களை மகிழ்விப்பதும்தான் எங்களின் முக்கிய முயற்சி. போனஸ் டிரெய்லரின் மூலம், படத்தைப் பார்ப்பதில் ரசிகர்களின் ஆர்வம் பலமடங்கு பெருகுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்ஸின் தயாரிப்பாளர் ஷோபியா பால் மேலும் கூறுகையில், “எங்கள் நோக்கம் மின்னல் முரளியை ஒரு முழுமையான படமாகவும், அனைவரும் ரசிக்கும்படியான ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகவும் தர வேண்டும் என்பது தான். மிகச்சிறப்பான கதையுடன் அற்புதமான நடிப்பை வழங்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு அனைத்தும் இணைந்து, ரசிகர்களை இப்படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். போனஸ் ட்ரெய்லர், படத்தில் வரவிருக்கும் விஷயங்கள் குறித்த ஆச்சர்யத்தை தூண்டி பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.” என்றார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close