Spotlightசினிமாவிமர்சனங்கள்

Miss Shetty Mr Polishetty – Review 3/5

இயக்கம்: மகேஷ் பாபு

நடிகர்கள்: அனுஷ்கா, நவீன்

ஒளிப்பதிவு: நிரவ்ஷா

இசை: ரதன்

கதைப்படி,

தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார் அனுஷ்கா. தனக்கு எல்லாமுமே தாய் தான் என்று இருக்கிறார். லண்டனில் மிகப்பெரும் நிறுவனத்தில் CHIEF குக்காக பணிபுரிகிறார் அனுஷ்கா.

தனது தாய்க்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பதை அறிந்து ஷாக் ஆகிறார் அனுஷ்கா. இந்தியா வரும் அனுஷ்கா அவர் தாயும் சிறிது நாட்கள் வாழ்கின்றனர் அந்த சிறிது நாட்களிலே தாயே இழந்து விடுகிறார் அனுஷ்கா. தாயைப் போல் அன்பு செலுத்த மற்றொரு துணை வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார் அனுஷ்கா.

அதற்காக திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் அனுஷ்கா. அந்த அந்த சமயத்தில் தனியார் மருத்துவமனையின் நாடுகிறார் அனுஷ்கா..

உடலுறவு இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்க நினைக்கும் அனுஷ்கா தனக்கான டோனரை தானே தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார். அதற்காக அங்கும் இங்குமாய் அலைகிறார் அனுஷ்கா. அப்போது நாயகன் நவீன் பாலிஷெட்டியை கண்டுபிடிக்கிறார் அனுஷ்கா. அவருடன் நட்பாக பழகுகிறார் அனுஷ்கா. இந்த நட்பை நவீன் காதலாக நினைத்துக் கொள்கிறார். அனுஷ்காவிடம் காதலை சொல்லும் தருணத்தில் தான் எதற்காக உன்னிடம் பழகுகிறேன் என்பதை  நவீனிடம் கூறி விடுகிறார் அனுஷ்கா..

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் நவின் பிறகு என்ன செய்தார் என்பது தான் படத்தின் மீதி கதை…

தன்னுடைய ரசிகர்களுக்கு அனுஷ்கா எந்த விதத்திலும் குறை வைக்காமல் தனது அழகால் அனைவரும் கட்டி போட்டு வைக்கிறார். அன்புக்காக இயங்கும் இடமாக இருக்கட்டும் தனது குழந்தைக்காக ஓடும் ஓட்டத்திலாவது இருக்கட்டும் அனைத்து இடங்களிலும் தனது நடிப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.

நவீனின் குறும்புத்தனமான நடிப்பு படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கிறது. வேகம் சுட்டித்தனம் என இரண்டிலும் அசத்தியிருக்கிறார் நவீன்..

எழுத்து மற்றும் இயக்கத்தில் தனித்து நிற்கிறார் மகேஷ் பாபு. தான் நினைத்ததை முழுவதுமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். உணர்வுரீதியாகவும் உணர்ச்சிகள் ரீதியாகவும் காதலையும் எமோஷனையும் மிக அழகாகவே நம்முள் கடத்தியிருக்கிறார் இயக்குனர்..

ரதனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே இளைஞர்களை கட்டி போடும் ஒரு சில காமெடிகள் இருப்பதால் எந்த இடத்திலும் சோர்வடைய விடாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர்.. நீரவ் ஷா’ன் ஒளிப்பதிவு லண்டனை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறது.

அனுஷ்காவை மேலும் அழகாகவும் காட்டியிருக்கிறார் நிரவ்ஷா, படத்தின் ஆரம்பத்திலேயே வரும் கிச்சன் காட்சிகளை அவ்வளவு அழகாக கொடுத்திருக்கிறார்.

காதல் என்றால் என்ன தனக்கான அன்பு எதிலிருந்து கிடைக்கிறது யாருக்காக அன்பை கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்து நகர்த்தி நம்மை படம் முழுவதையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு.

மொத்தத்தில் ,

Miss Shetty Mr Polishetty – அன்பு

Facebook Comments

Related Articles

Back to top button