Spotlightவிமர்சனங்கள்

ஸ்ட்ரைக்கர் விமர்சனம் 2.25/5

ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் எஸ் ஏ பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஸ்ட்ரைக்கர்.

நாயகன், ஜஸ்டின் விஜய் கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். அந்த வேலையை விட்டுவிட்டு, அமானுஷ்யங்களை பற்றி அறிந்து கொள்ள செல்கிறார்.

இதற்காகவே இருக்கும் இன்ஸ்டியூட் ஒன்றில் சேர்ந்து அமானுஷ்யங்களை பற்றி தெரிந்து கொள்கிறார். ஒருநாள், வீடு ஒன்றில் இருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாகவும், அதில் அமானுஷ்யம் இருப்பதாகவும் ஜஸ்டின் விஜய்க்கு தகவல் கிடைக்கிறது.

இதனால், அங்கு சென்று அந்த அமானுஷ்யத்தை காண அந்த வீட்டிற்குள் செல்கின்றனர் ஜஸ்டின் விஜய்யும் அவரது தோழியான வித்யா பிரதீப்பும்.

அந்த வீட்டிற்குள் சென்ற பின், அங்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நடிகர் ஜஸ்டின் விஜய், நடிப்பில் இன்னும் கவனமாக இருந்து கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருந்திருக்கலாம். காட்சிகளை தன்வசப்படுத்த பல இடங்கள் இருந்தும் ஜஸ்டின் விஜய் அதை சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிர்ச்சி, ஆச்சர்யம் என பல கோணங்களில் தனது நடிப்பை இன்னும் தெளிவாகவே கொடுத்திருந்திருக்கலாம்.

வழக்கமான, ஓஜோ போர்ட், வழக்கமான வீடு, வழக்கமான பேய், தேய்ந்து போன கதை என படத்தில் எதுவும் நம்மோடு ஒட்டவில்லை என்பதால் பெரிதான ஈர்ப்பை ஸ்டிரைக்கர் கொடுக்கவில்லை. பேய் படங்களை ரசிக்கும் ரசிகர்கள் ஒருமுறை விசிட் அடிக்கலாம் என்று கூறிக் கொண்டு

மொத்தத்தில்

ஸ்ட்ரைக்கர் – பயம் இல்லை..

Facebook Comments

Related Articles

Back to top button