Spotlightசெய்திகள்தமிழ்நாடு

சட்டப்பேரவையில் திமுக பங்கேற்பது குறித்து ஸ்டாலின் விளக்கம்!

சட்டசபையை முழுவதுமாக -புறக்கணித்து மாதிரி சட்டசபை நடத்தி வந்த மு க ஸ்டாலின், அதை நிராகரித்து மீண்டும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக பங்கேற்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘இன்று நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டத்தில் திமுக மீண்டும் பங்கேற்பது என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தக் கூட்டத்தொடரை முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவித்திருந்தது. இது தொடர்பாக ஸ்டாலின் அளித்திருந்த விளக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து தாங்கள் இரண்டு முறை வெளியேற்றப்பட்டால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது.

மேலும் தாங்கள் எதை செய்தாலும் வெளியேற்றி விடுகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினர். 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்ப்பு வர இருக்கிறது என்றும் அதன் பிறகு பெரும்பான்மையை நிருபிக்க வேண்டுமென்ற கட்டாயம் வரும். அதில் தாங்கள் பங்கேற்க கூடாது என புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள்.

தோழமை கட்சி தலைவர்கள் திமுக சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தனர். இது குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்கப் போகிறோம்.

இந்நிலையில், சட்டப்பேரவைக்கு மீண்டும் செல்வது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க,ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் உருவாகியுள்ள நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு வாதாடுவது அத்தியாவசியத் தேவை என்பதால் ஏற்கெனவே எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்துள்ளோம்.

திமுக சட்டப்பேரவைக்கு வெளியில் இருப்பதால் அதிமுக அரசு மக்கள் விரோதத் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி விடுவார்கள் என தோழமை கட்சிகளை சேர்ந்த பலரும் தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேரவைத் தலைவரை பதவியில் அமர்த்திய போது இருந்த நம்பிக்கை தற்போது தளர்ந்து விட்டதாகவும், இருந்தாலும் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப செயல்படும் கட்சி திமுக என்ற அடிப்படையிலும், புதிய நம்பிக்கையுடனும் சட்டப்பேரவைக்கு மீண்டும் செல்கிறோம்.’ என்று கூறினார்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்கு அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்புத் தெரிவித்துள்ளார். ஆனால் அதே சமயத்தில் சட்டப்பேரவையின் பொன்னான நேரத்தை திமுக வீணடித்து விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

– சீனிவாசன் அ

Facebook Comments

Related Articles

Back to top button