Spotlightசினிமா

மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லால் தேர்வு!

மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் திலீப் சங்க உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டார்.
Facebook Comments

Related Articles

Back to top button