விஸ்வரூபம் 2 படத்தின் ஒரு பாடலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் வாரத்தில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இயக்கி தயாரித்து வெற்றி கண்ட படம் விஸ்வரூபம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கியுள்ளார்.
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடலை வரும் வாரத்தில் (சனி அல்லது ஞாயிறு) வெளியிட இருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.
Facebook Comments