Spotlightவிமர்சனங்கள்

மான்ஸ்டர்; விமர்சனம் – 3.5/5

எஸ் ஜே சூர்யா  மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘மான்ஸ்டர்’. இப்படத்தினை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஒரு நாள் கூத்து என்ற படத்தினை இவர் இயக்கியுள்ளார்.
படத்தின் கதைப்படி,
மின் வாரியத்தில் பணி புரியும் எஞ்சினியராக வருகிறார் எஸ் ஜே சூர்யா. ஒரு சிறு பூச்சிக்குக் கூட கொல்ல நினைக்காத உள்ளம் தான் எஸ் ஜே சூர்யாக்கு.  திருமணம் செய்ய ஒரு பெண் கிடைக்காமல் அலைகிறார். சென்னையில் ஒரு கட்டிடத்தில் தனக்கென்று ஒரு ப்ளாட் வாங்கி குடியேறுகிறார். அந்த வீட்டில் குடியேறிய ராசி, ப்ரியா பவானி சங்கரின் நட்பு கிடைக்கிறது.
இப்படியாக எஸ் ஜே சூர்யாவின் வாழ்க்கை சென்று கொண்டிருக்க, அவர் தங்கியிருக்கும் ப்ளாட்டில் ஒரு எலி புகுந்து தனது அட்டகாச ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. வீட்டில் இருக்கும் அனைத்தையும் துவம்சம் செய்கிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நாயகன், அந்த எலியை பிடிக்க படும் பாடுதான் இந்த ‘மான்ஸ்டர்’.
இந்த இடையில், வைரக் கடத்தல் கும்பலும் அந்த எலியை தேடுகிறது. ஏன்.?? எதற்கு.??? என்பதற்கும் இப்படத்தில் பதில் இருக்கிறது.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா படத்தின் கதைக்கு பொருத்தமான தேர்வு தான், எலியோடு அவர் படும் இன்னல்களை தனது கண் பார்வையில் அசர வைக்கிறார். ப்ரியா பவானி சங்கர் அழகு தேவதையாக வந்து செல்கிறார். ரசிகர்களை தன் கண் பார்வையில் கட்டி போடுகிறார்.
இப்படத்தின் மெயின் ஹீரோ என்று சொல்ல வேண்டும் என்றால் அது அந்த ‘எலி’ தான். படத்தின் ஒட்டு மொத்த காட்சியையும் தூக்கிச் செல்வது இந்த எலி தான். இதை படமாக்க ஒரு இயக்குனராக நெல்சனின் முயற்சி நன்றாகவே வெற்றியடைந்திருக்கிறது.
கருணாகரனின் காமெடி ஆங்காங்கே கலகலப்பூட்டுகின்றன. ஜஸ்டின் பிரபாகரனி பின்னனி இசை, மிரள வைத்திருக்கிறது. எலியின் எஸ்ட்ரிக்கே ஒரு மாஸான இசையை கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறினால், அது ஒளிப்பதிவு தான். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஒரு எலியை இதுவரை யாரும் இப்படி ஒரு கோணத்தில் எடுத்திருக்கவில்லை, எடுக்கப்போவது இல்லை. ஒரு இடத்தில் கூட CG காட்சிகள் இல்லாமல், உண்மையான எலியைக் கொண்டு படமாக்கியதற்கே இயக்குனருக்கு பெரிய கைதட்டல் ஒன்றை கொடுக்கலாம்.
மான்ஸ்டர் – குடும்பத்தோடு பார்க்க வேண்டிய கோடைகால ஸ்பெஷல் கொண்டாட்டம்
Facebook Comments

Related Articles

Back to top button