Spotlightசினிமா

தேங்க்யூ டார்லிங் .. பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராஜமௌலி

யக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் இணைந்து பிரபாஸ் கொடுத்த பாகுபலி திரைப்படம் இந்திய திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது.

சமீபத்தில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார், இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

” எஸ் எஸ் ராஜமெளலி இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.

சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CmEy7KzP_I6/?igshid=YzFkMDk4Zjk=

இந்த மனமார்ந்த வாழ்த்துகளை பார்த்த எஸ்.எஸ்.ராஜமௌலி அதற்கு கீழ் கண்டவாறு பதிலளித்துள்ளார்

தேங்க்யூ டார்லிங். “என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்…” என்று கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CmEy7KzP_I6/?igshid=YzFkMDk4Zjk=

ஆர்மேக்ஸ் ஊடக அறிக்கையின்படி, ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 ஹிந்தி திரையரங்க படங்களில் இடம்பெற்ற இரண்டு பழமையான திரைப்படங்களின் வரிசையில் பிரபாஸின் பாகுபலியும் ஒன்றாகும்.

Facebook Comments

Related Articles

Back to top button